Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐரோப்பா முழுவதும் கடும் பனிப் பொழிவு

ஐரோப்பாவின் பல பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவால் குறைந்தது 17 பேர் மாண்டனர்.

வாசிப்புநேரம் -
ஐரோப்பா முழுவதும் கடும் பனிப் பொழிவு

(படம்: Twitter/Germany in Greece)

ஐரோப்பாவின் பல பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவால் குறைந்தது 17 பேர் மாண்டனர்.

சாலைகளில் மலைபோல் குவிந்து கிடக்க்கும் பனியால், போக்குவரத்து தடைபட்டுள்ளது.

ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பல இடங்களில் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

சுவிட்சர்லந்தின் கிழக்குப் பகுதி பனிச்சரிவால் பாதிக்க்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் பெய்த கடுமையான பனியால் ஐந்து மாவட்டங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

கட்டடங்களின் கூரைகளிலிருந்து பனியை அகற்றும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

ஆஸ்திரியாவில் பனிச்சரிவு அபாயம் குறித்த எச்சரிக்கை இரண்டாவது ஆக உயரிய நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அங்கு, கடந்த சில நாட்களிலேயே,ஒரு மாதத்திற்கான சராசரிப் பனிப்பொழிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்