Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வெளிநாட்டுப் பயணிகளுக்கு மீண்டும் எல்லையைத் திறக்க ஆலோசித்து வரும் ஐரோப்பிய ஒன்றியம்

வெளிநாட்டுப் பயணிகளுக்கு மீண்டும் எல்லையைத் திறக்க ஆலோசித்து வரும் ஐரோப்பிய ஒன்றியம் 

வாசிப்புநேரம் -
வெளிநாட்டுப் பயணிகளுக்கு மீண்டும் எல்லையைத் திறக்க ஆலோசித்து வரும் ஐரோப்பிய ஒன்றியம்

(படம்: Carlo Hermann/AFP)

ஐரோப்பிய ஒன்றியம், அடுத்த மாதம் முதலாம் தேதியிலிருந்து வெளிநாட்டுப் பயணிகளுக்கு அதன் எல்லையை மீண்டும் திறந்துவிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது.

27 ஒன்றிய நாடுகளில் புதிய கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் கணிசமாக குறைந்துள்ளது.

எனவே, எந்தெந்த நாட்டுப் பயணிகளை அனுமதிக்கலாம் என்பதை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பட்டியலிட்டு வருகின்றன.

கூடிய விரைவில் அதுகுறித்து தகவல்கள் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போதைக்கு ஜப்பான், தென் கொரியா, கனடா ஆகியவை பட்டியலில் இருப்பதாக தெரிகிறது.

அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகியவை பட்டியலில் இடம்பெறவில்லை.

அத்துடன், ஒருசில மாநிலங்களில் வெளிநாட்டுப் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவதும் கட்டாயமாக்கப்படலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்