Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தென் சீனக் கடற்பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கவலை

தென் சீனக் கடற்பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கவலை தெரிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -

தென் சீனக் கடற்பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கவலை தெரிவித்துள்ளன.

சீனாவின் நடவடிக்கைகள், பிரச்சினைக்குரிய, ஒருதலைப்பட்சமானவை என்று அவை வருணித்தன.

சீனாவுடனான உத்திப்பூர்வ போட்டித்தன்மையைக் கையாள, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்றாகப் பணியாற்ற வேண்டிய அவசியத்தை இருதரப்பும் வலியுறுத்தின.

சீனாவைப் பற்றி, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இரண்டாவது முறையாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.

சின்ஜியாங் (Xinjiang), திபெத் (Tibet) ஆகியவற்றில் நடப்பதாகச் சந்தேகிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் இருதரப்பும் கலந்துபேசின.

ஹாங்காங்கின் தன்னாட்சி நிலை கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்துவருவது பற்றியும் அதிகாரிகள் விவாதித்தனர்.

பெய்ச்சிங்குடனான பொருளியல், வர்த்தக விவகாரங்களும் பேச்சில் இடம்பெற்றன.

அறிவார்ந்த சொத்துரிமைகள், முக்கிய உள்கட்டமைப்பு, ரகசியத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் முக்கியத்துவம் பற்றியும் கலந்துபேசப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்