Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 பரவலைக் கட்டுப்படுத்த 230 மில்லியன் யூரோ நிதி: ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம், அந்த வட்டாரத்தில் COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த 230 மில்லியன் யூரோ நிதி வழங்க உறுதியளித்துள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19 பரவலைக் கட்டுப்படுத்த 230 மில்லியன் யூரோ நிதி: ஐரோப்பிய ஒன்றியம்

(படம்: REUTERS/Guglielmo Mangiapane)

ஐரோப்பிய ஒன்றியம், அந்த வட்டாரத்தில் COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த 230 மில்லியன் யூரோ நிதி
வழங்க உறுதியளித்துள்ளது.

ஐரோப்பாவில் இத்தாலி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு 280க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

COVID-19 கிருமிப்பரவலைத் தடுப்பதில் குழப்பம் நிலவியதாக அங்குள்ள ஒரு மருத்துவமனை ஒப்புக்கொண்டது.

அதன் பிறகு, நிலைமையைக் கட்டுப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

என்றாலும், போக்குவரத்து, வர்த்தகம் ஆகியவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை எந்தத் தடையும் விதிக்கவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்