Images
  • Eugenie
    (படம்: AP)

இங்கிலாந்தில் மீண்டும் அரச குடும்பத் திருமணம்


இங்கிலாந்தில் மீண்டும் ஓர் அரச குடும்பத் திருமணம். எலிசபெத் மகாராணியின் பேத்தியான இயூஜீனின் திருமண விழா நேற்று (ஆக்டோபர் 12) நடைபெற்றது.


இளவரசர் ஹேரிக்கும், அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலுக்கும் இந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. அவர்கள் மணம் புரிந்த அதே இடத்தில் இளவரசி இயூஜீனும், வர்த்தகர் ஜேக் ப்ரூக்ஸ்பேங்க்கைத் (Jack Brooksbank) திருமணம் செய்துகொண்டார்.


மக்கள் வரிப்பணத்திலிருந்து திருமண நிகழ்ச்சிக்காக 2.6 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளதாக மக்கள் பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சாடியுள்ளனர்.

இளவரசர் ஹேரி, மேகன் மார்க்கலைப் போலவே நேற்று திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு அரச குடும்பத்து புதுமணத் தம்பதி, குதிரை வண்டியில் பவனி வந்தனர்.


குதிரை வண்டியில் வலம் வராமல் தவிர்த்திருந்தால், செலவு குறைந்திருக்கும் என்று சிலர் கூறினர்.

Top