Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐரோப்பாவை நாடிச் செல்லும் சீனச் சுற்றுப்பயணிகள்

சீனச் சுற்றுப்பயணிகள் அதிகம் செலவு செய்பவர்களாகக் கருதப்படுகின்றனர். ஐரோப்பா செல்லும் சீனச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை வரும் 5 ஆண்டுகளில் சுமார் 70 விழுக்காடு உயரும் என முன்னுரைக்கப்படுகிறது. 

வாசிப்புநேரம் -
ஐரோப்பாவை நாடிச் செல்லும் சீனச் சுற்றுப்பயணிகள்

படம்: AFP/JOEL SAGET

சீனச் சுற்றுப்பயணிகள் அதிகம் செலவு செய்பவர்களாகக் கருதப்படுகின்றனர். ஐரோப்பா செல்லும் சீனச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை வரும் 5 ஆண்டுகளில் சுமார் 70 விழுக்காடு உயரும் என முன்னுரைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, மொத்தம் 12.4 மில்லியன் சீனர்கள் ஐரோப்பா சென்றனர். அந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டிற்குள் 20.8 மில்லியனாக உயரும் என சீனாவின் பயணத்துறைக் கழகம் எதிர்பார்க்கப்படுகிறது.

வெறும் பொருட்களை வாங்குவதற்காகவே சீனச் சுற்றுப்பயணிகள் முன்பு ஐரோப்பாவிற்குச் சென்றனர். ஆனால் தற்போது ஐரோப்பாவின் கலாசாரம் பற்றியும் நாட்டின் கிராமப்புறங்கள் பற்றியும் தெரிந்துகொள்வதில் அதிக நாட்டம் காட்டுவதாகத் சீனப் பயணத்துறைக் கழகம் தெரிவித்தது.

உலக வெளிநாட்டுச் சுற்றுலாத்துறையின் மிகப்பெரிய சந்தையாகச் சீனா விளங்குகிறது. ஆண்டுதோறும் 129 மில்லியன் சீனர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். ஒட்டுமொத்த உலகச் சுற்றுப்பயணிகளில் அது ஐந்தில் ஒரு பங்கு.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்