Images
  • austria covid
    (படம்: AFP)

ஐரோப்பாவில் கடுமையாகும் COVID-19 பரவல்

ஐரோப்பாவில் நோய்ப்பரவல் மீண்டும் கடுமையாகியுள்ளது.

ஜெர்மனியில் அதிகரித்துவரும் நோய்ப்பரவல் சம்பவங்களால், மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி வலியுறுத்தப்படுகிறது.

சில ஐரோப்பிய நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் நடப்புக்கு வந்துள்ளன.

ஆஸ்திரியாவில் மீண்டும் முடக்கநிலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த வாரயிறுதியின்போது கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அங்கு டிசம்பர் மாத நடுப்பகுதிவரை முடக்கம் நடப்பில் இருக்கும்.

இந்நிலையில், பிரஞ்சுப் பிரதமர் ஸான் காஸ்டெக்ஸுக்குக் (Jean Castex) கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர் 10 நாள் தனிமைப்பட்டிருப்பார் என்றும், தொடர்ந்து பணியில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவருடைய மகளுக்குக் கிருமித்தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் பரிசோதனை மேற்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 

Top