Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐரோப்பாவில் கிருமித்தொற்றால் மரணங்கள் அதிகரிக்கலாம்: உலகச் சுகாதார நிறுவனம்

உலகச் சுகாதார நிறுவனம் ஐரோப்பாவில் நோய்த்தொற்று நிலவரம் மோசமடைந்து வருவதாக எச்சரித்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஐரோப்பாவில் கிருமித்தொற்றால் மரணங்கள் அதிகரிக்கலாம்: உலகச் சுகாதார நிறுவனம்

(படம்: REUTERS/Gleb Garanich)

உலகச் சுகாதார நிறுவனம் ஐரோப்பாவில் நோய்த்தொற்று நிலவரம் மோசமடைந்து வருவதாக எச்சரித்துள்ளது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதால் மாண்டோர் எண்ணிக்கை உயரலாம் என அது கூறுகிறது.

தடுப்பூசி போடும் முயற்சிகள் அதிகரிக்கப்படவில்லையென்றால் அடுத்த நான்கு மாதங்களில் ஐரோப்பாவில் மேலும் 700,000 பேர் நோய்த்தொற்றுக்குப் பலியாகலாம் என நிறுவனம் முன்னுரைத்துள்ளது.

பெரும்பாலான நாடுகளில் மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பிவிடுவதற்கான சாத்தியம் இருப்பதையும் அது சுட்டியது.

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் சுமார் 68 விழுக்காட்டினரே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்டோரிடையே தடுப்பாற்றல் குறைவதாக ஆதாரங்கள் கிடைத்திருப்பதைத் தொடர்ந்து, booster எனும் கூடுதல் தடுப்பூசியைப் போடுவதற்கு முன்னுரிமை வழங்குமாறு அது நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்