Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

வாசிப்புநேரம் -
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

(படம்: AFP/LUCAS BARIOULET)

ஐரோப்பிய நாடுகளில், கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அங்கு மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், கிருமிப்பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார ஆணையம் எச்சரித்துள்ளது.

அண்மையில் கிடைத்த ஆதாரங்களின்படி, நோய்க்கிருமி தொற்றும் வேகம் அதிகரித்துள்ளதாக நோய்த்தடுப்பு, கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய நிலையம் தெரிவித்தது.

ஏற்கெனவே, கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகம் இருக்கும் இடங்களில், கிருமிப்பரவல் கடுமையாகும் சாத்தியம் உள்ளதாக நிலையம் குறிப்பிட்டது. கிருமிப்பரவல் தொடர்பான கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தாத நாடுகளில், கிருமிப்பரவல் அதிகரிக்கும் ஆபத்து மிக அதிகம் என்று நிலையம் எச்சரித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்