Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐரோப்பா முழுவதும் அதிகரிக்கும் கிருமிப்பரவல்

ஐரோப்பா முழுவதும் அதிகரிக்கும் கிருமிப்பரவல்

வாசிப்புநேரம் -

ஐரோப்பா முழுவதும் கிருமிப்பரவல் அதிகரிப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நோய்த்தொற்றை முறியடிக்க, சில நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன.

என்றாலும், முடக்கநிலையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவையாகக் கருதப்படுகின்றன.

பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் கிருமிப்பரவல் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பல்லாயிரக் கணக்கானோர் பேரணி நடத்தினர்.

அவர்களில் சிலர், காவல்துறையினரை நோக்கி வெடிகளை வீசினர். நிலைமையைச் சமாளிக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.
கூட்டத்தைக் கலைக்கத் தண்ணீரையும் பீய்ச்சி அடித்தனர்.

உணவகங்கள் அல்லது மதுக்கூடங்களுக்குச் செல்ல சிறப்பு அனுமதி தேவை என்ற நடைமுறைக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தடுப்பூசி போட்டோருக்கு மட்டுமே அந்த அனுமதி வழங்கப்படுகிறது.

நெதர்லந்திலும் அதேபோன்ற ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்