Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐரோப்பாவில் அதிகரிக்கும் கிருமிப்பரவல்

ஐரோப்பாவில் அதிகரிக்கும் கிருமிப்பரவல்

வாசிப்புநேரம் -

ஐரோப்பாவில் புதிதாகக் கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அங்குள்ள அரசாங்கங்கள் புதிய முடக்கநிலையை அறிவிக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றன.

அது வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் முயற்சிகளைத் தாமதப்படுத்துவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தடுப்பூசித் திட்டங்கள் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் பல மாதங்கள் வீட்டில் முடங்கியிருந்தவர்கள் சற்று சுதந்திரமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நோய்ப்பரவல் மூன்றாவது கட்டத்தை நோக்கிச் செல்கிறது. அதைக் கட்டுபடுத்துவது கடினமாக உள்ளது.

ஏற்கனவே 750 பில்லியன் யூரோ நோய்த்தொற்று மீட்பு நிதியை செலவழித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், இன்னும் அதிகமாகச் செலவிட்டுத் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்று பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மெக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்தார்.

- AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்