Images
  • europe
    (கோப்புப் படம்: REUTERS/Yara Nardi)

ஐரோப்பாவில் 17 விநாடிக்கு ஒருவர், கிருமித்தொற்றால் இறக்கிறார்: உலகச் சுகாதார நிறுவனம்

ஐரோப்பாவில், 17 விநாடிக்கு ஒருவர், கிருமித்தொற்றால் பலியாவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் 15.7 மில்லியனுக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் மட்டும், 29,000க்கும் அதிகமானோர் பலியாயினர்.

பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில், பாதிக்கப்பட்டோரில் அதிகமானோர் மாண்டனர்.

அடுத்த ஆறு மாதம், ஐரோப்பிய நாடுகளுக்குக் கடுமையாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

தடுப்பூசி குறித்து நம்பிக்கையான தகவல் சென்ற வாரம் வெளியிடப்பட்டது. என்றாலும், அது மட்டுமே தீர்வாகாது என்று நிறுவனம் குறிப்பிட்டது.

Top