Images
  • flood
    படம்: AP Photo/Michael Probst

மேற்கு ஐரோப்பாவில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது - தேடுதல் பணிகள் தீவிரம்

மேற்கு ஐரோப்பாவில் வெள்ளம் வடியத் தொடங்கியிருக்கும் வேளையில், உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

திடீர் வெள்ளத்தால், 190க்கும் அதிகமானோர் மாண்டனர்.

வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

வெள்ளத்தால், ஜெர்மனியில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அதிகத் தாக்கம் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

ஜெர்மனியில் மட்டும் 160க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.

வெள்ளப்பெருக்கு குறித்து, மக்களை முன்கூட்டியே எச்சரிக்கத் தவறியதாக எழுந்துள்ள குறைகூறலை, ஜெர்மானிய உள்துறை அமைச்சர் நிராகரித்தார். 

Top