Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐரோப்பிய நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன

ஐரோப்பிய நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன 

வாசிப்புநேரம் -

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகள் வரும் கோடைக்காலத்தில் தளர்த்தப்படவுள்ளன.

அதனால், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்படவோ, கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளவோ தேவையின்றி பயணம் செய்யலாம்.

பாதுகாப்பாகப் பயணம் செய்யக்கூடிய ஒன்றிய நாடுகளின் பட்டியல் விரிவுபடுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறப்புக் கிருமித்தொற்றுச் சான்றிதழ்கள் அறிமுகம் காணும்.

அந்தச் சான்றிதழில் தனிநபர்களின் தடுப்பூசி விவரம், முன்னைய கிருமித்தொற்று, பரிசோதனை முடிவுகள் ஆகியவை இடம்பெறும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்