Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அனைத்துலக அளவில் குற்றச்செயல்களைத் தடுக்கும் நோக்கில் ஆஸ்திரேலியா, நியூசிலந்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

அனைத்துலக அளவில் குற்றச்செயல்களைத் தடுக்கும் நோக்கில் ஆஸ்திரேலியா, நியூசிலந்தில் நூற்றுக்கணக்கானோர் கைது 

வாசிப்புநேரம் -

அனைத்துலக அளவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான முயற்சியின் கீழ், ஆஸ்திரேலியாவிலும் நியூசிலந்திலும் நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உலகிலேயே, மிக அதிநவீன முறையில் நடத்தப்பட்ட கைதுநடவடிக்கை அது என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியக் காவல்துறையினர், அமெரிக்க மத்தியப் புலனாய்வுத் துறையுடனும் Europol எனும் ஐரோப்பியக் காவல்துறையுடனும் இணைந்து அந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஜெர்மனி, சுவீடன், நெதர்லந்து போன்ற நாடுகளின் சட்ட அமலாக்கத் துறைகளும் அதற்குக் கைகொடுத்தன.

'Operation Ironside' எனும் அந்த ரகசிய நடவடிக்கை மூவாண்டுக்கு முன் தொடங்கியது.

ANOM என்ற செயலி உலகம் முழுதும் உள்ள குண்டர் கும்பல்களிடையே பரவ விடப்பட்டது.

அதன் மூலம் கும்பல்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.

21 கொலைத் திட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மூவாயிரம் கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்