Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனாவுக்காக வேவுபார்த்த உளவாளிக்கு 20 ஆண்டுச் சிறை

சீனாவுக்காக வேவுபார்த்த முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிக்கு 20 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சீனாவுக்காக வேவுபார்த்த உளவாளிக்கு 20 ஆண்டுச் சிறை

படம்: AFP/SAUL LOEB

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சீனாவுக்காக வேவுபார்த்த முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிக்கு 20 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

62 வயது கேவின் மெலரி (Kevin Mallory), ரகசிய அமெரிக்கத் தற்காப்பு விவரங்களைச் சீனப் புலனாய்வு அமைப்புக்கு 25,000 டாலருக்கு விற்றுள்ளார். 

2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் ஷங்ஹாயிற்குப் பயணம் மேற்கொண்டபோது, அந்தப் பரிவர்த்தனை நடந்தது.

சீன மொழியைச் சரளமாகப் பேசும் மெலரி அமெரிக்க ராணுவத்தில் சேவையாற்றினார். பாதுகாப்புச் சேவையில் சிறப்பு அதிகாரியாகவும் அவர் பணிபுரிந்தார்.

பின்னர் அவர் மத்திய உளவு ஆணையத்தின் அதிகாரியாகப் பணிமாற்றப்பட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்