Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆடவர் மீண்டும் நடக்க உதவிய புற உடற்கூட்டு

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவர் தற்போது மீண்டும் நடக்க ஆரம்பித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆடவர் மீண்டும் நடக்க உதவிய புற உடற்கூட்டு

(படம்: AFP/Fonds de Dotation Clinatec - Clinatec Endowment Fund)


பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவர் தற்போது மீண்டும் நடக்க ஆரம்பித்துள்ளார்.

தோள்பட்டைக்குக் கீழ் உடலின் எந்தப் பகுதியையும் முன்பு அவரால் அசைக்க முடியாது.

இந்த exoskeleton எனும் புற உடற்கூட்டின் உதவியுடன் அவர் இப்போது சொந்தமாக நடமாட முடிகிறது.

அவரின் உடலுடன் கயிற்றால் புற உடற்கூடு இணைக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் ஆடவரின் உடலை ஒருநிலைப்படுத்த முடிகிறது.

ஆனால், மூளையின் வாயிலாகவே ஆடவரின் உடல் அசைவுகள் இடம்பெறுகின்றன.

இந்தப் புற உடற்கூட்டை பிரஞ்சு ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஆய்வுக்கூடங்களில் தற்போது பயன்படுத்தப்படும் இது சில வருடங்களுக்குப் பின் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் மூலம் நோயாளிகளின் வாழ்க்கைத் தரம் பெரிதும் மேம்படும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்