Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சருமத்தை வெண்மையாக்கும் முயற்சியில் சுயநினைவை இழந்த பெண்

கடந்த 12 ஆண்டுகளாகச் சருமத்தை வெண்மையாக்கும் களிம்புகளை வாங்கி வந்த பெண் ஒருவர், methylmercury எனப்படும் ஒருவகைப் பாதரசத்தால் மருத்துவமனையில் சுயநினைவு இழந்த நிலையில் உள்ளார்.

வாசிப்புநேரம் -
சருமத்தை வெண்மையாக்கும் முயற்சியில் சுயநினைவை இழந்த பெண்

படம்: Pixabay

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

கடந்த 12 ஆண்டுகளாகச் சருமத்தை வெண்மையாக்கும் களிம்புகளை வாங்கி வந்த பெண் ஒருவர், methylmercury எனப்படும் ஒருவகைப் பாதரசத்தால் மருத்துவமனையில் சுயநினைவு இழந்த நிலையில் உள்ளார்.

கலிஃபோர்னியாவில் வசித்து வந்த 47 வயது மாது தம் நண்பரிடமிருந்து மெக்ஸிகோவில் தயாரிக்கப்படும் முகக் களிம்புகளை வாங்குவதுண்டு. Pond’s Rejuveness களிம்பு மெக்ஸிகோவில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

அவர் வாங்கிய களிம்பிலோ பாதரசம் சேர்க்கப்பட்டிருந்தது என்று AP செய்தி நிறுவனம் தெரிவித்தது.

களிம்பைப் பயன்படுத்தியதில் பெண்ணுக்குக் கை கால்களில் உணர்வுகள் மறைந்தன, பின்னர் அவரால் பேசவும் இயலவில்லை என்பதால்,   மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

அமெரிக்காவில் அழகு சாதனப் பொருளால் சுயநினைவு இழந்த முதல் நபர் அவர்தான்.

பெண் பயன்படுத்திய களிம்பில் அதன் உற்பத்திக்குப் பிறகு, முறைகேடாகப் பாதரசம் சேர்க்கப்பட்டது. ஆனால் பல அழகுச் சாதனப் பொருள்களில் தயாரிப்பின்போதே பாதரசம் கலக்கப்படுகிறது.

சருமத்தை வெண்மையாக்கும் பாதரசம் பல பக்கவிளைவுகளைக் கொண்டது.

களிம்பைத் தயாரித்த பாண்ட்ஸ் நிறுவனம், தான் பாதரசத்தைச் சேர்ப்பதில்லை என்று தெரிவித்தது. அண்மைச் சம்பவம் குறித்து அதிகாரிகளோடு இணைந்து புலன்விசாரணை நடத்தப்போவதாக அது குறிப்பிட்டது.

அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அழகு சாதனப் பொருள்களில் பாதரசம் தடைசெய்யப்பட்டாலும் அவை பரவலாக பயன்படுத்தப்படுகின்ரன.

சருமத்தை வெண்மையாக்கும் அழகு சாதனப் பொருள் சந்தையின் மதிப்பு 2024இல் 31.2 பில்லியன் டாலரை எட்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்