Images
  • face transplant surgery (1)
    (படம்: AFP)

கட்டிகள் நிறைந்திருந்த முகத்தில் இப்போது களங்கமற்ற தோற்றம்

பாரிஸ்: முகம் முழுவதும் கட்டிகள் ஏற்பட்டு மிகவும் கோரமாகக் காணப்பட்டவர் இப்போது சாதாரணமாகத் தோற்றமளிக்கத் தொடங்குகிறார்.

மரபணுக் கோளாற்றால் 43 வயது ஜெரோம் ஹாமனின் முகத்தில் பல இடங்களில் கட்டிகள் ஏற்பட்டன.

ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் வெற்றிகரமாகச் செய்யப்பட்ட சிறப்பு முகமாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவருடைய முகம் ஓரளவு கட்டிகளில்லாமல் வழுவழுப்பாக உள்ளது.

லொரோண்ட் டண்டியேரி எனும் பாரிஸ் மருத்துவரிடம் நீண்ட நாட்கள் முயன்று படிப்படியாக அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார்.

முன்பு அவருக்கு 2010ல் முதல் முகமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அது வெற்றிபெறவில்லை.

தம்முடைய முகத்தைத் தானம் செய்ய 22 வயது ஃபிரெஞ்சு ஆடவர் முன்வந்ததைத் தொடர்ந்து இவ்வாண்டு ஜெரோமுக்கு மீண்டும் முகமாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Top