Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

முக மாற்று சிகிச்சை பெற்ற ஆக இளைய அமெரிக்கர்

துப்பாக்கியால் சுடப்பட்ட முகத்தில் பலத்த காயங்கள். நாங்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிலை மாறி புதிய தோற்றத்துடன் காணப்படுகிறார் இந்தப் பெண்மணி.

வாசிப்புநேரம் -
முக மாற்று சிகிச்சை பெற்ற ஆக இளைய அமெரிக்கர்

(படம்: Facebook / Praying for Katie Stubblefield and Cleveland Clinic)

துப்பாக்கியால் சுடப்பட்ட முகத்தில் பலத்த காயங்கள். நாங்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிலை மாறி புதிய தோற்றத்துடன் காணப்படுகிறார் இந்தப் பெண்மணி.

காரணம் அவருக்கு புதிய முகம் பொருத்தப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்ற கேட்டி ஸ்டபல்ஃபீல்ட் (Katie Stubblefield) தம்மைத் தாமே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்.

அப்போது, முகத்தில் குறிப்பாக நெற்றி, கண்கள், வாய், மூக்கு ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர் உயிர் பிழைப்பாரா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு விடிவுகாலம் இவ்வாண்டு கிடைத்தது.

அவருடைய பின்னணியை அறிந்து பலர் அவருக்கு நன்கொடை வழங்கி உதவி செய்ய முன்வந்தனர்.

அப்படித் திரட்டிய பணத்தால் அவருக்கு புதிய வகை சிகிச்சை கிடைத்தது.

புதிய முகத்தைப் பொருத்திக்கொள்ளும் மாற்று சிகிச்சைக்காக அவர் பதிவு செய்தார்.

14 மாதங்களுக்குப் பிறகு அவருக்கு முக நன்கொடையளிப்பவரும் கிடைத்தார்.

அதிகமான போதைப் பொருள் உட்கொண்டதில் உயிரிழந்த மாது ஒருவரின் முகம் கேட்டியின் முகமாகப் பொருத்தப்பட்டது.

21 வயதில் முழு முகத்தை மாற்று சிகிச்சையின் மூலம் பெற்ற ஆக இளைய அமெரிக்கர் என்ற பட்டமும் கேட்டிக்குக் கிடைத்தது.

31 மணி நேரம் நீடித்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு புதிய தோற்றத்துடன் புதிய வாழ்க்கையை நடத்த கேட்டி தயாராக இருக்கிறார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்