Images
  • fb
    (படம்: REUTERS/Dado Ruvic)

Facebook பயனீட்டாளர்களின் குரல் பதிவுகள் எழுத்து வடிவில்

Facebook பயனீட்டாளர்களின் குரல் பதிவுகளை எழுத்து வடிவில் கொண்டு வந்துள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்காக ஒப்பந்தக்காரர்களுக்கு Facebook நிறுவனம் பணம் கொடுத்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் அந்தச் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

பயனீட்டாளர்களின் அனுமதியுடனேயே அவ்வாறு குரல் பதிவுகள் எழுத்து வடிவில் கொண்டு வரப்பட்டதாக Facebook பதிலளித்தது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயனீட்டாளர்கள் தங்கள் குரல் பதிவுகளை எழுத்து வடிவில் கொண்டு வருவதற்குச் சம்மதம் தெரிவித்ததாகவும் Bloomberg செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.  

Top