Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சர்ச்சைக்குரிய ஊடகச் சட்டத்தை மாற்ற ஆஸ்திரேலியா ஒப்புதல் - செய்திப் பக்கங்களின் தடையை விரைவில் நீக்கவிருக்கும் Facebook

சர்ச்சைக்குரிய ஊடகச் சட்டத்தை மாற்ற ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டதால், செய்திப் பக்கங்களின் மீதான தடை விரைவில் நீக்கப்படும் என்று  Facebook நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சர்ச்சைக்குரிய ஊடகச் சட்டத்தை மாற்ற ஆஸ்திரேலியா ஒப்புதல் - செய்திப் பக்கங்களின் தடையை விரைவில் நீக்கவிருக்கும் Facebook

(கோப்புப் படம்: AFP / Josh Edelson)

சர்ச்சைக்குரிய ஊடகச் சட்டத்தை மாற்ற ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டதால், செய்திப் பக்கங்களின் மீதான தடை விரைவில் நீக்கப்படும் என்று Facebook நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகத் தளங்களில் செய்திகள் இடம்பெற செய்தி நிறுவனங்களுக்குக் கட்டணம் செலுத்தவேண்டும் என்ற புதிய சட்டம் தொடர்பில் இரு தரப்புகளும் இணக்கம் கண்டுள்ளதாய் Facebook தெரிவித்தது.

புதிய மாற்றங்களால், பொது அக்கறைக்குரிய செய்தித்துறையில் முதலீடு அதிகரிக்கலாம், வரும் நாள்களில் ஆஸ்திரேலியர்களுக்கு Facebook இல் செய்திப் பக்கங்கள் மீண்டும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் Facebook நிறுவனம் ஆஸ்திரேலியாவில் செய்திப் பக்கங்கள் உட்பட மற்ற சில பக்கங்களையும் தடை செய்தது.

செய்திகளுக்காகக் கட்டணம் செலுத்துவது குறித்து உள்ளூர் ஊடகங்களுடன் ஏதேனும் ஒரு வழியில் இணக்கம் கண்டால் Facebook, Google போன்ற நிறுவனங்களின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது.

முதலில் சேவைகளை மீட்டுக்கொள்வதாகக் கூறிய Google நிறுவனம், தன் நிலைப்பாட்டை மாற்றி News Corp.,Nine Entertainment போன்ற ஊடகத் தளங்களுடன் மில்லியன் டாலர் மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்