Images
  • facebook (2)
    படம்: AFP/LOIC VENANCE

சேவைத் தடைக்குக் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணம் - Facebook

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

Facebook நிறுவனம் , தனது சேவையில் ஏற்பட்ட பெரிய அளவிலான தடைக்கு அதன் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணம் எனத் தெரிவித்துள்ளது.

உலகின் பல இடங்களில் சேவைத் தடை சுமார் 12 மணிநேரம் நீடித்தது.

அது குறித்து முதலில் விளக்கம் எதனையும் Facebook வழங்கவில்லை.

சேவைத் தடை ஏற்பட்ட கிட்டத்தட்ட 24 மணிநேரத்துக்குப் பிறகு, அது பற்றிய விளக்கத்தையும் சேவைத் தடை குறித்து மன்னிப்பையும் அது தெரிவித்துக்கொண்டது.


Top