Images
  • Facebook Bride
    (படம்: Pixabay)

Facebook-இன் ஆவணங்களை வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பொய்ச் செய்தி விசாரணைக் குழு

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பொய்ச் செய்தி விசாரணைக் குழு Facebook நிறுவனத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

Facebook தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் உட்பட அதிகாரிகள் சிலரின் மின்னஞ்சல் பரிவர்த்தனைகளும் அவற்றுள் உள்ளன.

Facebook நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ள மென்பொருள் நிறுவனத்திடமிருந்து அந்த மின்னஞ்சல்கள் கைப்பற்றப்பட்டன.

பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழு வெளியிட்ட 250 பக்க அறிக்கைக்கு Facebook மறுப்புத் தெரிவித்துள்ளது.

இரகசியமானதாக வகைப்படுத்தப்பட்டுள்ள சில முக்கிய ஆவணங்களும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை தவறான கண்ணோட்டத்தில் அமைந்துள்ளது. அதில் கூடுதல் தகவல்கள் சேர்க்கப்படவேண்டும் என்று Facebook குறிப்பிட்டது.

2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு மென்பொருள் நிறுவனங்களுடன் தகவல் பரிமாறுவதை நிறுத்திக்கொண்டதாக Facebook பேச்சாளர் கூறினார்.

Top