Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Facebook, WhatsApp, Instagram ஆகிய சமூக ஊடகங்களில் சேவைத் தடங்கல்

உலகின் சில பகுதிகளில் Facebook, WhatsApp, Instagram ஆகிய சமூக ஊடகங்களின் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
Facebook, WhatsApp, Instagram ஆகிய சமூக ஊடகங்களில் சேவைத் தடங்கல்

(படம்: REUTERS/Dado Ruvic/Illustration/File Photo)

உலகின் சில பகுதிகளில் Facebook, WhatsApp, Instagram ஆகிய சமூக ஊடகங்களின் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

அதைக் குறித்து Facebook அதன் Twitter பக்கம் வாயிலாக இன்று காலை  அறிவித்தது.

அந்தத் தடங்கலை விரைவில் சரிசெய்ய Facebook நிறுவனம் பாடுபட்டு வருவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன் சமூகத் தளங்கள், ஊடுருவல் தாக்குதலுக்கு ஆளாகவில்லை என்றும் உறுதிசெய்யப்பட்டது.

அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவை அந்தத் தடங்கலால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன.




 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்