Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Facebook நிழற்படங்கள், காணொளிகள் நீக்க உத்தரவிடுவது தொடர்பாக ஐரோப்பிய உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

Facebookஇல் வெளியாகும் நிழற்படங்களையும் காணொளிகளையும் நீக்குவதற்கு அந்த நிறுவனத்துக்கு உத்தரவிடுவது தொடர்பாக, ஐரோப்பிய உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது.

வாசிப்புநேரம் -

Facebookஇல் வெளியாகும் நிழற்படங்களையும் காணொளிகளையும் நீக்குவதற்கு அந்த நிறுவனத்துக்கு உத்தரவிடுவது தொடர்பாக, ஐரோப்பிய உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது.

அதன்படி, சர்ச்சைக்குரிய படங்களும் காணொளிகளும் வெளியான நாடு மட்டுமின்றி உலகின் மற்ற பகுதிகளிலும் அவற்றை நீக்குவதற்குத் தனி நாடுகள் Facebook நிறுவனத்துக்கு உத்தரவிட முடியும்.

சட்டவிரோதமான பதிவுகள் குறித்து உலகெங்கும் கண்காணிக்கும்படி, நாடுகள் Facebook நிறுவனத்துக்கு உத்தரவிட முடியும்.

சில நாடுகளில் அந்தப் பதிவுகள் சட்ட விரோதமாக இல்லாவிட்டாலும்கூட Facebook அந்த உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டுமென ஐரோப்பிய உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

ஆனால், அந்த உத்தரவைச் சில நாடுகள் தங்கள் எதிர்ப்பாளர்களை அடக்குவதற்கு முறைகேடாகப் பயன்படுத்தக்கூடுமென மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்