Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Facebookஇன் 'Libra' நாணயத்தின் தயாரிப்பை நிறுத்தக் கோரிக்கை

Facebook நிறுவனத்தின் Libra எனும் புதிய மின்னிலக்க நாணயத்தின் தயாரிப்பை நிறுத்திவைக்க வேண்டும் என்று அமெரிக்க நிதிச் சேவைப் பிரிவுக் குழு கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -
Facebookஇன் 'Libra' நாணயத்தின் தயாரிப்பை நிறுத்தக் கோரிக்கை

(படம்: Reuters)

Facebook நிறுவனத்தின் Libra எனும் புதிய மின்னிலக்க நாணயத்தின் தயாரிப்பை நிறுத்திவைக்க வேண்டும் என்று அமெரிக்க நிதிச் சேவைப் பிரிவுக் குழு கூறியுள்ளது.

புதிய மின்னிலக்க நாணயம் குறித்த விவரங்களை Facebook நிர்வாகிகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

Facebook தகவல் பாதுகாப்பைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகக் குறைகூறப்பட்டது.

எனினும் நவீன மின்னிலக்கச் சாதனங்களின் மூலம் மலிவுக் கட்டணத்தில் உலக அளவில் பரிவர்த்தனையை எளிமையாக்குவது அதன் நோக்கம் என்று கூறியுள்ளது Facebook.

நிறுவனம் அடுத்த ஆண்டு புதிய மின்னிலக்க நாணயத்தை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்