Images
  • Facebook EU

தனிப்பட்ட தகவல் பரிமாற்றத்துக்கு அனுமதி கோரும் Facebook

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

Facebook நிறுவனம், தனது குறுஞ்செய்திச் சேவையில், சங்கேத முறையிலான தகவல் பரிமாற்றத்தைச் சாத்தியப்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளது.

அது ஏற்றுக்கொள்ளப்பட்டால், சட்டத்தின் பிடி தளரக்கூடும், சிறார் பாலியல் குற்றவாளிகள் எண்ணிக்கை பெருகக்கூடும் என்று அமெரிக்க மத்தியப் புலனாய்வுத்துறை இயக்குநர் கிறிஸ்டோஃபர் ரே எச்சரித்துள்ளார்.

சிறார் துன்புறுத்தல் தொடர்பில் மில்லியன் கணக்கான வழக்குகளைப் பற்றித் துப்புத் துலக்க Facebook தளமாக அமைந்துள்ளது.

அந்த நிலை இனி மாறக்கூடும் என்ற கவலை அதிகரித்துள்ளது.

ஆனால், சங்கேதத் தகவல் பரிமாற்ற முறை நடப்புக்கு வந்தாலும், குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்கிறார் Facebook நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்.


Top