Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Facebookஇன் புது மின்னிலக்க நாணயம்

Facebook நிறுவனம் Libra எனும் புதிய மின்னிலக்க நாணயத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

Facebook நிறுவனம் Libra எனும் புதிய மின்னிலக்க நாணயத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.

நவீன மின்னிலக்கச் சாதனங்களின் மூலம் மலிவுக் கட்டணத்தில் உலக அளவில் பரிவர்த்தனையை எளிமையாக்குவது அதன் நோக்கம்.

Libra, உலகளாவிய புதிய நாணயமாக அது திகழும் என்று கூறப்படுகிறது. 

அடுத்த ஆண்டு அதை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது Facebook.

நிதிச் சேவை வழங்கும் லாப நோக்கமற்ற அமைப்புகள், இணைய வர்த்தக நிறுவனங்கள் உட்பட சுமார் 25 பங்காளித்துவ அமைப்புகள் அதில் பங்கெடுத்துள்ளன.

மின்னிலக்க நாணயத்தைச் சேமிக்கவும் செலவிடவும் பரிவர்த்தனை செய்யவும் ஏதுவாக Calibra என்ற மின்னிலக்க பணப்பையையும் Facebook உருவாக்கியுள்ளது.

அந்த நிறுவனத்தின் தகவல் பரிமாற்றச் செயலிகளான Messenger, WhatsApp தளங்களுடன் Calibra இணைக்கப்படும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்