Images
  • fb
    (படம்:  REUTERS/Dado Ruvic)

இணையக் காணொளியை ஒன்றாகக் கண்டு ரசிக்கப் பயனீட்டாளர்களுக்கு வசதி செய்துள்ள Facebook

Facebook நிறுவனம் தனது Messenger செயலியில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அதன்மூலம், Facebook பயனீட்டாளர்கள் இனி ஒன்றிணைந்து காணொளிகளைக் கண்டு ரசிக்கமுடியும்.

காணொளியை, சக நண்பர்கள் எவ்வாறு ரசிக்கின்றனர் என்பதை உடனுக்குடன் நேரடியாகக் காணமுடியும்.

'Watch Together' என்னும் வசதியின் மூலம் 8 பேர் வரை காணொளி அழைப்பில் இணையமுடியும்.

'Messenger Rooms' மூலம் 50 பேர்வரை ஒன்றாக ஒரே நேரத்தில் உரையாட முடியும்.

Zoom காணொளிச் சேவைக்கு Facebook-இன் புதிய வசதி, போட்டி கொடுக்கும் எனக் கருதப்படுகிறது.


 

Top