Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஒரு போத்தலினால் காப்பாற்றப்பட்ட குடும்பம்

அருவியில் சிக்கிக் கொண்ட குடும்பம் ஒன்று போத்தலில் பொறிக்கப்பட்ட உதவி எச்சரிக்கையினால் காப்பாற்றப்பட்டது.

வாசிப்புநேரம் -
ஒரு போத்தலினால் காப்பாற்றப்பட்ட குடும்பம்

(படம்: CINDI BARBOUR)

அருவியில் சிக்கிக் கொண்ட குடும்பம் ஒன்று போத்தலில் பொறிக்கப்பட்ட உதவி எச்சரிக்கையினால் காப்பாற்றப்பட்டது.

கர்டிஸ் விட்சன் (Curtis Whitson), அவரது காதலி, மகன் மூவரும் கலிஃபோர்னியாவில் Arroyo Seco நதியோரமாக நடந்துகொண்டிருந்தனர். 

அருவியிலிருந்து கயிறு வழியாகக் கீழே இறங்கி அவர்கள் தங்கும் முகாமிற்குச் செல்வது அவர்களின் திட்டம். ஆனால் வழியில் பள்ளத்தாக்கில் அவர்கள் சிக்கிக்கொண்டனர்.

அருவியிலிருந்து இறங்கக் கயிறு ஏதுமில்லை. உதவிக்காக யாரையும் தொடர்புகொள்ளவும் முடியவில்லை.

விட்சன் தம் பையில் இருந்த துண்டுச் சீட்டு ஒன்றை எடுத்து அதில் அவர்கள் சிக்கியிருக்கும் விவரத்தை எழுதி காலி போத்தலினுள் வைத்தார். போத்தலின் வெளிப்புறத்தில் "help" என்ற சொல்லையும் பொறித்தார். போத்தலை அருவியின் நீரில் மிதக்கவிட்டார்.

சுமார் 400 மீட்டர் தொலைவில், நதி வழியாக நடந்துகொண்டிருந்த இருவர் போத்தலைக் கண்டெடுத்தனர்.

ஒரு சில மணிநேரங்களுக்குப் பின் மீட்புப் பணியினர் விட்சன் குடும்பத்தைக் கண்டுபிடித்தனர். மூவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

தம் அதிர்ஷ்டத்தை எண்ணி வியப்பதாகவும், தமது உதவிக் கடிதத்தைக் கண்டிபிடித்தவர்களுக்கு நன்றி கூற விரும்புவதாகவும் விட்சன் கூறினார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்