Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அன்புக்குரியவர்கள் மாண்டபின் அவர்களுடைய Facebook பக்கங்கள் என்ன ஆகும்?

அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் மனத்தைப் புண்படுத்துவதைத் தவிர்க்க Facebook அதன் தளத்தில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்யவுள்ளது. 

வாசிப்புநேரம் -
அன்புக்குரியவர்கள் மாண்டபின் அவர்களுடைய Facebook பக்கங்கள் என்ன ஆகும்?

(படம்: Reuters)


(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் மனத்தைப் புண்படுத்துவதைத் தவிர்க்க Facebook அதன் தளத்தில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்யவுள்ளது.

அன்புக்குரியவர்களைத் தொடர்புகொள்வது, அவர்களுடன் தகவல்களைப் பரிமாறுவது போன்ற பல பயன்களை Facebook மூலம் பெறலாம்.

ஆனால் அதே சமயம் ஒருவர் மாண்டு போனபிறகு, அவரோடு நண்பராகச் சேரவோ, அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கூறவோ பரிந்துரைத்து தளம் தானாக அனுப்பும் அறிவிப்புகள் அன்புக்குரியவர்களின் மனத்தைப் புண்படுத்தக்கூடும்.

இதனைத் தவிர்க்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தப்போவதாக Facebook அறிவித்துள்ளது.

ஒருவர் மாண்டபின், நண்பர்களோ குடும்பத்தினரோ அவருடைய Facebook பக்கத்தைச் செயலிழக்கச் செய்யப் பரிந்துரைக்கலாம்.

அல்லது தமது மரணத்துக்குப் பிறகு தமது கணக்கை நிரந்தரமாக அழித்துவிடச் சொல்லி ஒருவர் கேட்டுக்கொள்ளலாம்.

மாண்டவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒருவரின் பக்கத்தை “memorialize” செய்யலாம்.

அவ்வாறு செய்வதன் வாயிலாக மாண்டவர் தாம் உயிரோடு இருக்கும்போது இட்ட Facebook பதிவுகளை உறவினர்களும் நண்பர்களும் தொடர்ந்து பார்க்கலாம்.

ஆனால், அவ்வாறு செய்யப்படாத நிலையில் மாண்டவர்களின் Facebook பக்கங்களை அடையாளம் காண்பதற்கு புதிய தொழில்நுட்பம் உதவும்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்