Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Facebook சமூக ஊடகங்களில் இன்று எதுவும் பதிவுசெய்யப் போவதில்லை! - அமெரிக்க பிரபலங்கள்

கிம் கார்டேஷியன் (Kim Kardashian), லியோனார்டோ டி காப்ரியோ (Leonardo DiCaprio),மைக்கல் B. ஜோர்டன் (Michael Jordan) உள்ளிட்ட பிரபலங்கள் இன்று தங்களுடைய Facebook, Instagram பக்கங்களில் எதையும்  பதிவுசெய்யப்போவதில்லை.

வாசிப்புநேரம் -

கிம் கார்டேஷியன் (Kim Kardashian), லியோனார்டோ டி காப்ரியோ (Leonardo DiCaprio),மைக்கல் B. ஜோர்டன் (Michael Jordan) உள்ளிட்ட பிரபலங்கள் இன்று தங்களுடைய Facebook, Instagram பக்கங்களில் எதையும் பதிவுசெய்யப்போவதில்லை.

சமூக ஊடகத் தளங்களில் பகைமை, பொய்த் தகவல் ஆகியவற்றுக்கு எதிராக Facebook நிறுவனம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் அவ்வாறு முடிவெடுத்துள்ளனர்.

"Stop Hate for Profit" எனும் இயக்கத்தின் ஓர் அங்கமாக சமூக ஊடகங்களில் இன்று பதிவிடப் போவதில்லை என்று பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

"அமெரிக்காவில் வேண்டுமென்றே பிளவை ஏற்படுத்துவதற்குப் பகைமை, பொய்த் தகவல் ஆகியவற்றைச் சில குழுக்கள் பரப்புவதைத் தளங்கள் அனுமதிக்கின்றன. ஒன்றும் செய்யாமல் என்னால் இருக்க முடியவில்லை. " என்று 188 மில்லியன் Instagram ரசிகர்களைக் கொண்ட கார்டேஷியன் கூறினார்.

பாகுபாடு, பகைமை, வன்முறை ஆகியவற்றை ஏற்படுத்தும் தகவல் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அரசாங்கங்கள் மட்டுமல்ல ஆர்வலர்களும் Facebook நிறுவனத்திற்கு கடும் நெருக்கடி அளித்து வருகின்றனர்.

Facebook-இல் விளம்பரம் செய்வதைத் தடைசெய்யும் மற்றோர் இயக்கத்தில், ஜூலை மாத நிலவரப்படி, 1,000 நிறுவனங்கள் சேர்ந்துள்ளன.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்