Images
  • pixabay
    படம்: Pixabay 

Facebook அதன் தளங்களை இணைத்தால்?

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

WhatsApp, Instagram, Facebook Messenger தகவல் பரிமாறிக்கொள்ளும் செயலிகளின் சேவையை இணைக்கத் திட்டமிடுவதாக Facebook இவ்வாண்டு தொடக்கத்தில் அறிவித்திருந்தது.

2014ஆம் ஆண்டு Facebook அதன் தளத்திலேயே நண்பர்களுடன் உரையாட வகைசெய்த அம்சத்தை அது நீக்கியது.

நண்பர்களுடன் உரையாடும் சேவையை Facebook Messenger எனும் தனிச் சேவைக்கு மாற்றியது.

தகவல் பரிமாற்றுச்சேவையில் ஆதிக்கம் செலுத்த விரும்பி Facebook அவ்வாறு செய்ததாகக் கூறப்பட்டது.

அதன் பின் WhatsApp, Instagram ஆகிய தகவல் பரிமாறிக்கொள்ளும் சேவைகளை Facebook வாங்கியது.

அதனால் அது தற்போது சேவைகளை இணைப்பது குறித்து மறுஆய்வு செய்கிறது.

இதனால் Facebook தளத்தில் இருக்கும் ஒருவர், அவரது WhatsApp, Instagram நண்பர்களுக்கும் அதிலிருந்தே தகவல் அனுப்பலாம்; அவர்களோடு உரையாடலாம்.

அதேபோல WhatsApp, Instagram சேவையில் இருப்போரும் Facebook தளத்துக்குச் சென்றுதான் அங்கிருக்கும் நண்பர்களைத் தொடர்புகொள்ளவேண்டும் என்ற அவசியம் இருக்காது.

குறிப்பிட்ட ஒரு சமூக ஊடகத்தளத்தைவிட்டு வெளியேறாமல் அதன் வாயிலாகவே பல்வேறு தளங்களில் உள்ள நண்பர்களை தொடர்புகொள்ள புதிய அம்சம் வழிவிடும் என்று கூறப்படுகிறது.  


Top