Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Google, Facebook வர்த்தக முறை மனித உரிமைகளுக்கு மிரட்டலாக உள்ளது-Amnesty International அமைப்பு

Google, Facebook ஆகிய இரண்டின் வர்த்தக முறைகளும் மனித உரிமைகளுக்கு மிரட்டலாய் விளங்குவதாக Amnesty International அமைப்பு கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -

Google, Facebook ஆகிய இரண்டின் வர்த்தக முறைகளும் மனித உரிமைகளுக்கு மிரட்டலாய் விளங்குவதாக Amnesty International அமைப்பு கூறியுள்ளது.

Amnesty International அமைப்பு மனித உரிமை மீறல்களை எதிர்க்கும் அரசு சாரா அமைப்பு.

அந்த இரண்டு இணையத் தளங்களின் தகவல் திரட்டு வர்த்தக நடைமுறை உலகெங்கிலும் மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தலாய் இருப்பதாக அமைப்பு சொன்னது.

மக்களுக்கு இலவச இணையச் சேவைகளை வழங்குவதும் பிறகு அவர்களைப் பற்றிய தகவல்களைக்கொண்டு பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் விளம்பர நிறுவனங்களைக் குறிவைப்பதும் மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் பேச்சுச் சுதந்திரத்தையும் பாதிக்கும் அம்சங்கள் என அமைப்பு வாதிட்டது.

வழங்கப்படும் சேவைகள் பயனுள்ளவையாக இருந்தாலும் Google, Facebook இரண்டு தளங்களும் காசு இல்லாமல் செயல்படுவதில்லை என்று அமைப்பின் அறிக்கை குறிப்பிட்டது.

அவற்றின் வர்த்தக இயல்பு காரணமாக, ஏராளமான தகவல்களை அவற்றால் திரட்டமுடிகிறது.

பின்னர் அவை, அந்தத் தகவல்களைத் தனது வாடிக்கையாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் சாத்தியம் இருப்பதை Amnesty International அமைப்பு சுட்டிக் காட்டியது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்