Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அதிபர் டிரம்ப்பின் கணக்கிற்குத் தற்காலிகத் தடை- அகற்றத் திட்டமில்லை: Facebook

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கணக்கிற்கு விதித்துள்ள தற்காலிகத் தடையை அகற்றத் திட்டம் இல்லை என்று Facebook நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கணக்கிற்கு விதித்துள்ள தற்காலிகத் தடையை அகற்றத் திட்டம் இல்லை என்று Facebook நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலவரம்பின்றி அந்தத் தடை நடப்பில் இருக்கும் என அது குறிப்பிட்டது.

அந்தச் சமூக ஊடகத் தளத்தைப் பயன்படுத்தி, திரு. டிரம்ப் வன்முறையைத் தூண்டியதாக, Facebook தலைவர் மார்க் ஸக்கர்பர்க் (Mark Zuckerberg) கூறியிருக்கிறார்.

சென்ற நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்குப் பிறகு சமூகப் பதற்றம் நேரலாம் என்று திரு. ஸக்கர்பர்க் எச்சரித்திருந்தார்.

திரு. டிரம்ப்பின் ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, அவரது Facebook, Instagram கணக்குகளை, அந்நிறுவனம் கடந்த வாரம் தடைசெய்தது.

இதற்கிடையே, Twitter நிறுவனம், மேலும் ஒரு படி சென்று, திரு. டிரம்ப்பின் Twitter கணக்கை முற்றிலும் அகற்றிவிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்