Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நம்பகமான செய்திகளை அதிகரிக்க கருத்தாய்வுகளைப் பயன்படுத்தவிருக்கும் Facebook

பொய்ச் செய்திகளும் பிரசாரங்களும் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கையாக அது கருதப்படுகிறது.  

வாசிப்புநேரம் -
நம்பகமான செய்திகளை அதிகரிக்க கருத்தாய்வுகளைப் பயன்படுத்தவிருக்கும் Facebook

(படம்: AFP)

 Facebook அதன் பக்கங்களில் செய்தி நிறுவனங்களின் நம்பகத்தன்மையைப் பொறுத்தே அவை வெளியிடும் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயனீட்டாளர்களைக் கொண்டு கருத்தாய்வுகள் நடத்தப்படும்.

அவற்றின் அடிப்படையில் எந்தச் செய்தி நிறுவனங்கள் நம்பகமானவை எனத் தீர்மானிக்கப்படும் என்றது Facebook.

அதன் பக்கங்களில் வரும் செய்திகள் ஐந்து விழுக்காட்டிலிருந்து நான்கு விழுக்காட்டுக்குக் குறைக்கப்படும் என Facebook நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான மார்க் ஸக்கர்பர்க் கூறினார்.

பொய்ச் செய்திகளும் பிரசாரங்களும் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கையாக அது கருதப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்