Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

10 ஆண்டுகள் அதிபர் டிரம்ப் வரி செலுத்தவில்லை - நியூயார்க் டைம்ஸ்

அமெரிக்க அதிபர்  டோனல்ட் டிரம்ப், 2016-ஆம் ஆண்டு, வெறும் 750 டாலர் வருமான வரி் செலுத்தியதாக, New York Times நாளிதழ் தகவல் அளித்துள்ளது.

வாசிப்புநேரம் -
10 ஆண்டுகள் அதிபர் டிரம்ப் வரி செலுத்தவில்லை - நியூயார்க் டைம்ஸ்

(கோப்புப்படம்: Reuters/Carlos Barria)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், 2016-ஆம் ஆண்டு, வெறும் 750 டாலர் வருமான வரி் செலுத்தியதாக, New York Times நாளிதழ் தகவல் அளித்துள்ளது.

அதிபர் பொறுப்பை ஏற்ற முதல் ஆண்டிலும், அதே போன்று அவர் 750 டாலர் வரி செலுத்தியதாக அந்த நாளேடு குறிப்பிட்டது.

திரு.டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில், 10 ஆண்டுகள், வரி எதனையும் செலுத்தவில்லை என, வரி ஆவணங்களை மேற்கோள்காட்டி New York Times தகவல் அளித்தது.

வருமானத்தை விட தமக்கு இழப்பு அதிகம் இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தது, வரி விதிக்கப்படாததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர்கள் தங்கள் தனிப்பட்ட நிதி கணக்குகள் பற்றிய விவரங்களை வெளியிடுவதற்கான சட்டரீதியான தேவை இல்லை.

ஆனால், முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்சனை அடுத்து அந்தப் பொறுப்பில் இருந்த அனைவரும் தங்கள் நிதி தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

திரு. டிரம்ப் மட்டுமே, இதுவரை அந்த வழக்கத்துக்கு மாறாகச் செயல்பட்டுள்ளார்.

New York Times நாளிதழ் அளித்த தகவலைப், பொய்ச் செய்தி என்று அவர் வருணித்துள்ளார்.

அதிபர் டிரம்ப், 2015-ஆம் ஆண்டில் இருந்து, மில்லியன் கணக்கான டாலர் தனிப்பட்ட வரிகளைச் செலுத்தியதாக, அவரது வழக்கறிஞர்களில் ஒருவர் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்