Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை உரிமமின்றி ஒளிபரப்பிய நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்படும்

2018 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை உரிமமின்றி ஒளிபரப்பிய சவுதி அரேபிய தொலைக்காட்சி ஒளிவழியான beoutQ மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம்(FIFA) கூறியுள்ளது. 

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை உரிமமின்றி ஒளிபரப்பிய நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்படும்

(படம்: REUTERS/Maxim Shemetov)

2018 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை உரிமமின்றி ஒளிபரப்பிய சவுதி அரேபிய தொலைக்காட்சி ஒளிவழியான beoutQ மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம்(FIFA) கூறியுள்ளது.

beoutQ ஒளிவழி போட்டிகளை உரிமமின்றி ஒளிபரப்புவதைத் தடுக்க அனைத்து வழிகளையும் ஆராய்ந்துவருவதாகக்கூறி அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் முன்பே கண்டித்திருந்தது.

beoutQ நிறுவனத்தின் செயலுக்கு சவுதி அரேபியாவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முடிந்தவரை அதன் செயலைத் தடுத்து நிறுத்த முற்படுவதாக சவுதி அரேபியா கூறியுள்ளது.

இவ்வாறு உரிமமின்றி ஒளிபரப்பப்படும் போக்கை உலக நாடுகள் எதிர்க்க வேண்டும் என அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் வலியுறுத்துகிறது.

அதுகுறித்து BeoutQ ஒளிவழி இதுவரை கருத்துரைக்கவில்லை. ஒளிவழியின் உரிமையாளர் யார், நிர்வகிப்பவர் யார் போன்ற விவரங்களும் தெளிவாகத் தெரியவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்