Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை... 9 மாதங்கள் கண்டிராத இறக்கம்...

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்துவரும் வர்த்தகப் பூசலைத் தொடர்ந்து சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை 9 மாதங்கள் கண்டிராத இறக்கத்தைக் கண்டது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை... 9 மாதங்கள் கண்டிராத இறக்கம்...

(படம்: Reuters)

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்துவரும் வர்த்தகப் பூசலைத் தொடர்ந்து சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை 9 மாதங்கள் கண்டிராத இறக்கத்தைக் கண்டது.

ஆசியாவைச் சுற்றியுள்ள முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்வதில் கவனத்தைச் செலுத்தினர்.

200 பில்லியன் டாலர் மதிப்புமிக்க சீனப் பொருட்களுக்குப் புதிதாய் 10 விழுக்காட்டு வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நேற்று மிரட்டல் விடுத்திருந்தார்.

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் மேலும் பல பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்தால், அதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பெய்ச்சிங் எச்சரித்தது.

இந்நிலையில் ஆசியப் பங்குகள் நான்கு மாதத்தில் ஆகக் குறைவாகப் பதிவானது.

இந்த ஆண்டின் முதல் பாதியில் சவால்மிக்க சோதனை காலம் இது என நிதித் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தீவிரமான வர்த்தகப் போர் மூண்டால் அது உலக வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும் என்று முதலீட்டாளர்களும் வர்த்தக வல்லுநர்களும் கவலைப்படுகின்றனர்.

எனினும் இது அதிபர் டிரம்பின் இன்னொரு உத்தியாக இருக்கக் கூடும் என மூத்தப் பொருளியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

வடகொரியாவுடன் பயன்படுத்திய உத்திபோன்று இது தெரிகிறது என்றார் தோக்கியோவைச் சேர்ந்த வல்லுநர் ஹிராயாமா. எனினும் சீனாவிடம் அந்த உத்தி பலனளிக்கும் சாத்தியம் மிகக் குறைவு என்பதும் அவரின் கருத்தாக இருந்தது.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்