Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தற்கொலைக்குப் பெயர்போன ஃபின்லந்து 'மகிழ்ச்சிக்குப்' பெயர்பெற்றது எப்படி?

ஃபின்லந்து உலகின் ஆக மகிழ்ச்சியான நாடு என ஐக்கிய நாட்டு நிறுவனம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.

வாசிப்புநேரம் -
தற்கொலைக்குப் பெயர்போன ஃபின்லந்து 'மகிழ்ச்சிக்குப்' பெயர்பெற்றது எப்படி?

(படம்: LEHTIKUVA / Heikki Saukkomaa via REUTERS/File )

ஃபின்லந்து உலகின் ஆக மகிழ்ச்சியான நாடு என ஐக்கிய நாட்டு நிறுவனம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.

ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்பு அது உலகிலேயே ஆக அதிக தற்கொலை விகிதம் கொண்ட நாடுகளின் பட்டியலில் 2ஆம் இடத்தில் இருந்தது.

1990-களோடு ஒப்பிடுகையில் தற்போது ஃபின்லந்தில் தற்கொலை விகிதம் பாதியாகக் குறைந்துள்ளது.

அதற்கு முக்கியக் காரணம் அங்கு 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பொதுநல மேம்பாட்டு இயக்கம்.

இயக்கம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோருக்குச் சிகிச்சை அளிப்பதோடு, அவர்களுக்கு ஆதரவு அளிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

அதுமட்டுமல்லாமல், ஃபின்லந்து மக்களின் வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு, பொதுச் சேவை ஆகியவை கணிசமாக மேம்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய ஆய்வில், ஃபின்லந்து மக்களில் 86 விழுக்காட்டினர் வேலை வாழ்க்கைச் சமநிலையோடு திருப்தியாக இருப்பது தெரியவந்துள்ளது.

பொதுவில், இயற்கையோடு ஒன்றி, மனத்துக்குப் பிடித்ததைச் செய்து மகிழ்ச்சிகரமாக வாழ்வதாகக் கூறுகின்றனர் ஃபின்லந்து மக்கள்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்