Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மின் சிகரெட்டால் விமானத்தில் தீ

லாஸ் வேகாஸ் நகரில் புறப்பட்டு, சிகாகோ அனைத்துலக விமான நிலையத்தில் தரையிரங்கிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் தீப்பற்றிக்கொண்டது.  

வாசிப்புநேரம் -
மின் சிகரெட்டால் விமானத்தில் தீ

( படம்: REUTERS )

லாஸ் வேகாஸ் நகரில் புறப்பட்டு, சிகாகோ அனைத்துலக விமான நிலையத்தில் தரையிரங்கிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் தீப்பற்றிக்கொண்டது.

விமானத்தில் இருந்த பயணி ஒருவரின் மின் சிகரெட்டால் தீ விபத்து ஏற்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன. மின் சிகரெட் அதிகம் சூடாகியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

பயிற்சி பெற்ற விமானச் சிப்பந்திகள் தீயை உடனடியாக அணைத்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவத்தின்போது விமானத்தில் 138 பயணிகளும், 6 விமானச் சிப்பந்திகளும் இருந்தனர். யாருக்கும் காயமில்லை.

அமெரிக்கப் போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகப் பிரிவின் பரிந்துரைப்படி
மின் சிகரெட்டுகளைப் பயணிகள் கைப்பைகளில் எடுத்துச் செல்லலாம், ஆனால் சரக்குப் பகுதியில் வைக்கப்படும் (checked luggage) பைகளில் வைக்கக்கூடாது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்