Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகின் முதல் மனித உரிமைத் தொலைக்காட்சி ஒளிவழி

உலகின் முதல் மனித உரிமைக்கான தொலைக்காட்சி ஒளிவழி லண்டனில் தொடங்கப்பட்டுள்ளது. பொது ஊகடங்களில் வெளிவராத செய்திகளைப் புதிய ஒளிவழி வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என்று உறுதியளிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
உலகின் முதல் மனித உரிமைத் தொலைக்காட்சி ஒளிவழி

படம்: Pixabay

உலகின் முதல் மனித உரிமைக்கான தொலைக்காட்சி ஒளிவழி லண்டனில் தொடங்கப்பட்டுள்ளது. பொது ஊகடங்களில் வெளிவராத செய்திகளைப் புதிய ஒளிவழி வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என்று உறுதியளிக்கப்பட்டது.

அந்த இணையம் வழியான ஒளிவழியை அனைத்துலக மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு தொடங்கியுள்ளது.

மனித உரிமை தொடர்பான விவகாரங்களை அது அலசும்.

20க்கும் அதிகமான நாடுகளில் அதன் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.

ஒடுக்கப்படும் மக்களின் கருத்துகளுக்குப் புதிய ஒளிவழி வாய்ப்பளிக்கும் என்று கருதப்படுகிறது.

அகதிகள், பத்திரிக்கை சுதந்திரம், தீவிரவாதம், பெண்ணுரிமை, பாலினம் தொடர்பான சர்ச்சைகள் உள்ளிட்ட தலைப்புகளில் அந்த  ஒளிவழி நிகழ்ச்சிகளைப் படைக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்