Images
  • fisherman cocaine (1)
    (படம்: AFP)

மீனவர் வலையில் சிக்கிய 48 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருள்?

வலையில் மீன் சிக்கியதோ இல்லையோ, மீனவர் ஒருவரின் வலையின் 48 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருள் சிக்கியதாக நம்பப்படுகிறது.

சுமார் 4 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள போதைப்பொருள் மார்ஷல் தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

வெள்ளை நிறத்தில் உள்ள அந்தத் தூள் பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டிருந்தது.

போதைப்பொருளை உறுதிசெய்ய போதிய வசதி இல்லாததால் அமெரிக்க பொதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் ஒத்துழைப்பை நாடியுள்ளது மார்ஷல் தீவு.

தென்னமெரிக்காவிலிருந்து ஆசியாவுக்கு செல்லும் அந்தப் பாதையில் போதைப்பொருள்கள் கண்டெடுக்கப்படுவது இது முதன்முறையல்ல.

2002லிருந்து 2009 வரை சுமார் 6 முறை போதைபொருள் அல்லது போதைப்பொருள்கள் கொண்ட படகுகள் கண்டெடுக்கப்பட்டன.

நீண்ட காலமாக அந்தக் கடல் பாதை வழியாகப் போதைப்பொருள் கடத்தல் நடந்து வருவதாக 2012இல் வெளிவந்த ஆஸ்திரேலிய அறிக்கை தெரிவித்தது.

 

Top