Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: ஃபுளோரிடா கடற்படைத் தளத்தில் துப்பாக்கிச் சூடு - 3 பேர் மரணம்

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள கடற்படைத் தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர்.  

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள கடற்படைத் தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர்.

எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.

கைத் துப்பாக்கியைக் கொண்டு அந்தத் தாக்குதலை நடத்தியவர் சவுதி அரேபிய இராணுவத்தைச் சேர்ந்த முகமது சயித் அல்ஷம்ரானி (Mohammed Saeed Alshamrani) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவரைக் கடற்படை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

அமெரிக்கக் கடற்படைத் தளத்தில் இந்த வாரம் இடம்பெற்றுள்ள இரண்டாவது துப்பாக்கிச் சூடு அதுவாகும்.

சவுதி அரேபிய ஆகாயப் படையைச் சேர்ந்த முகமது சயித் பயிற்சிக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.

அவர் என்ன காரணத்துக்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது.

இதற்கிடையே, சவுதி அரேபிய மன்னர் தம்மைத் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்