Images
  • florida (1)
    (படம்: AFP Photo/CHANDAN KHANNA)

புளோரிடாவில் COVID-19 நோயால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில் சூறாவளி அபாயம்

அமெரிக்க மாநிலமான புளோரிடாவில்(Florida), இதுவரை இல்லாத அளவில் 260 மரணங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 3 நாள்களாக அந்த மாநிலத்தில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அங்குப் புதிதாய் 9,000 நோய்ச் சம்பவங்கள் பதிவாயின.

மொத்தம் 470,000க்கும் கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கலிஃபோர்னியாவுக்கு அடுத்தபடியாக COVID-19 நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக புளோரிடா உள்ளது.

இந்நிலையில், புளோரிடாவின் கரைகளைச் சூறாவளி இன்றிரவுக்குள் கடக்கும் அபாயம் உள்ளதால், அங்குள்ள பல பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Top