Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அதிவேகத்தில் பறக்கும் மின்-டாக்சிகள்... எங்கு?

அதிவேகத்தில் பறக்கும் மின்-டாக்சிகள்... எங்கு?

வாசிப்புநேரம் -
அதிவேகத்தில் பறக்கும் மின்-டாக்சிகள்... எங்கு?

படம்: REUTERS

அமெரிக்க நிறுவனமான Archer Aviation, அதன் முதல் பறக்கும் மின்-டாக்சியை அறிமுகம் செய்துள்ளது.

அந்த மின்-டாக்சி, ஆகாயத்தில் பயணம் செய்ய இன்னும் அங்கீகாரம் பெறவில்லை.

Maker என, அந்தப் பறக்கும் மின்-டாக்சிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியாக இப்போதைக்குப் பறக்கவில்லை என்றாலும், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது Maker.

வர்த்தக ரீதியாக அது, 2024ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸிலும் மயாமியிலும் அது அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maker, மணிக்குச் சுமார் 240 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடியது.

அதிகபட்சமாக Maker, 100 கிலோமீட்டர் வரை பயணம் செய்யக்கூடியது.

சுமார் 1.6 கிலோமீட்டர் பயணத்துக்கு 4 டாலர் வரையிலான கட்டணம் செலுத்தவேண்டி வரலாம்.

நியூயார்க் சிட்டியின் John F. Kennedy அனைத்துலக விமான நிலையத்திலிருந்து மன்ஹாட்டன் வரையிலான சுமார் 27 கிலோமீட்டர் தொலைவு செல்வதற்கு, Maker அதிகபட்சமாக ஏழே நிமிடங்கள்தான் எடுக்கும்.

ஒப்புநோக்க, அதே தொலைவைக் காரில் கடக்க, ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம்வரை பிடிக்கும்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்