Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பறக்கும் டாக்ஸிகள்!

நியூசிலந்தில் விமானிகளின்றி பறக்கும் டாக்ஸிகள் சோதிக்கப்பட்டு வருகின்றன.

வாசிப்புநேரம் -
பறக்கும் டாக்ஸிகள்!

(படம்: Richard Lord/Zephyr Airworks/AFP)

நியூசிலந்தில் விமானிகளின்றி பறக்கும் டாக்ஸிகள் சோதிக்கப்பட்டு வருகின்றன. அந்த சோதனை முயற்சிக்கும் ஆதரவளிக்கும் திட்டத்தை, Google நிறுவனத்தின் இணை நிறுவனரான திரு லேரி பேஜ் (Larry Page) வழிநடத்தி வருகிறார்.

கோரா (Cora) எனப்படும், அத்தகைய விமானிகளின்றி பறக்கும் டாக்ஸிகள், ஹெலிகாப்டரைப் போன்று இயக்கக்கூடிய மின்சாரத் தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அதன் செயல்பாட்டால், அதிக இரைச்சல் ஏற்படாது என்று அதனை வடிவமைத்த தொழில்நுட்பக் குழு கூறியது.

அது மிகவும் அமைதியான முறையில், நகர்ப்புற இடங்களில் பயணிகளை ஏற்றிச் செல்ல உகந்த வகையில் வடிமைக்கப்பட்டிருப்பதாக நிபுணர்கள் கூறினர்.

அந்த முறை நடப்புக்கு வர, இன்னும் ஆறு ஆண்டுகள் பிடிக்கலாம் என்றும், அதுவரை, நியூசிலந்தின் கிரைஸ்ட்சார்ச் (Christchurch) நகரில், அதன் சோதனை முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அந்தக் குழு கூறியது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்