Images
  • Jeff Bezos
    (படம்: Reuters)

பெருஞ்செல்வந்தர் பட்டியலில் 2,755 பேர்

Forbes பத்திரிகை இந்த ஆண்டிற்கான
பெருஞ்செல்வந்தர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் 2,755 பேர் பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள செல்வத்தை வைத்திருக்கின்றனர்.

முதலிடத்தில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பேசோஸ் (Jeff Bezos) உள்ளார்.

அவர் தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் ஏலன் மஸ்க் (Elon Musk) உள்ளார். கடந்த ஆண்டு அவர் 31ஆவது இடத்தில் இருந்தார்.

4-வது இடத்தில் பில் கேட்ஸ் உள்ளார்.

5-ஆம் இடத்தில் Facebook நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் உள்ளார்.

COVID-19 சூழலால் உலகப் பொருளியல் பாதிக்கப்பட்டிருந்தாலும் பெருஞ்செல்வந்தர்களின் செல்வங்கள் செழித்து வளர்கின்றன.

இந்த ஆண்டின் செல்வந்தர் பட்டியலில் உள்ளவர்களின் மொத்தச் சொத்து மதிப்பு சுமார் 13.1 டிரில்லியன் டாலர்.

கடந்த ஆண்டு அது 8 டிரில்லியன் டாலர்.

இந்த ஆண்டின் செல்வந்தர் பட்டியலில் புதிதாக 493 பேர் இணைந்தனர்.  

Top