Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கடந்த 20 ஆண்டுகளில் உலகின் காடுகளில் 100 மில்லியன் ஹெக்டர் அழிக்கப்பட்டுள்ளது

கடந்த 20 ஆண்டுகளில் உலகின் காடுகளில் 100 மில்லியன் ஹெக்டர் அழிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
கடந்த 20 ஆண்டுகளில் உலகின் காடுகளில் 100 மில்லியன் ஹெக்டர் அழிக்கப்பட்டுள்ளது

(படம்: AFP)

கடந்த 20 ஆண்டுகளில் உலகின் காடுகளில் 100 மில்லியன் ஹெக்டர் அழிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் காடுகள் அழிக்கப்படும் வேகம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மொத்த நிலப்பரப்பில் காடுகளின் விகிதம் 2000ஆம் ஆண்டில் 31.9 விழுக்காடாக இருந்தது. தற்போது அது 31.2விழுக்காடாக உள்ளது.

உலகின் காடுகளில் 100 மில்லியன் ஹெக்டர் அழிக்கப்பட்டதை அது குறிப்பதாக உணவு வேளான்மை அமைப்பு தெரிவித்தது.

சஹாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகள், தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் ஆக அதிகமாகக் காடுகள் அழிக்கப்பட்டன.

தென்னமெரிக்காவில் அந்தப் போக்கு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

வளரும் நாடுகளில் பயிர்கள், கால்நடைகளுக்காகக் காடுகள் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

2015இல் தென் கிழக்காசிய நிலப்பரப்பில் 49 விழுக்காடாக இருந்த காடுகள், தற்போது 47.8 விழுக்காடாகக் குறைந்துள்ளன.

எனினும் ஆசியாவின் மற்ற பகுதிகள், ஐரோப்பா,
வட அமெரிக்கா ஆகியவற்றில் காடுகளின் அளவு அதே நிலையில் அல்லது அதிகரித்து உள்ளன.

சீனா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் அதன் நிலப்பரப்புகளின் மொத்த அளவில் காடுகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்